கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149 ஆக அதிகரிப்பு

261

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்து 274 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149 ஆக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 149 ஆக அதிகரித்துள்ளதாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 274ஆக அதிகரித்துள்ளது. 411 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 4 ஆயிரத்து 643 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of