கொரோனா வைரஸ் – 60 ஆயிரத்தை தாண்டிய பலி எண்ணிக்கை

408

உலக அளவில் கொரோனா வைரஸால் பலியானவர்கள் எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டியது. வைரஸ் பாதிப்பில் இருந்து குணமானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 34 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 11 லட்சத்து 30 ஆயிரத்து 575 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் புதிதாக ஒரு லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக, அமெரிக்காவில் மட்டும் இரண்டு லட்சத்து 77 ஆயிரத்து 522 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகளவில் லேசான வைரஸ் தாக்குதல் உடன்  7 லட்சத்து 96 ஆயிரத்து 892 பேரும், தீவிர சிகிச்சையில் 39 ஆயிரத்து 480 பேரும் உள்ளனர்.

மேலும், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு 60 ஆயிரத்து 124 பேர் உயிரிழந்து உள்ளனர். அதிகபட்சமாக, இத்தாலியில் மட்டும் 14 ஆயிரத்து 681 பேர் உயிரிழந்து உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக ஸ்பெயினில் 11 ஆயிரத்து 744 பேரும், அமெரிக்காவில் 7 ஆயிரத்து 403 பேரும் கொரோனா வைரஸுக்கு பலியாகியுள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of