புழல் சிறையில் அடைக்கப்பட்ட வங்கதேசத்தைச் சேர்ந்த 11 பேரில் 2 பேருக்கு கொரோனா

1077

திண்டுக்கல்லில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்ட வங்கதேசத்தைச் சேர்ந்த 11 பேரில் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

திண்டுக்கல்லில் சீல் வைக்கப்பட்ட பேகம்பூர் பகுதியில், விசா காலம் முடிந்து தங்கி இருந்ததால், வங்கதேசத்தைச் சேர்ந்த 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல் நீதிமன்றத்தின் உத்தரவின் படி, 11 பேருக்கும் திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது, பரிசோதனையில் நோய் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து 11 பேரும் நீதிமன்ற உத்தரவின் பேரில், கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இரண்டாம் கட்ட வைரஸ் தொற்று பரிசோதனையில், 11 பேரில் 2 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of