இந்தியாவில் 24 மணி நேரத்தில் 26, 506 பேருக்கு கொரோனா

502

இந்தியாவில் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி, தினந்தோறும் ஆயிரக்கணக்கானோரை பாதிப்புக்கு உள்ளாக்கி வருகிறது.

இன்று காலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  7 லட்சத்து 93 ஆயிரத்து 802 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 26 ஆயிரத்து 506 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒருநாளில்  பதிவாகும் உச்சபட்ச எண்ணிக்கை இதுவாகும்.  அதேபோல், கடந்த ஒரு 24 மணி நேரத்தில் 475 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 21 ஆயிரத்து 604 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை  4 லட்சத்து 95 ஆயிரத்து 513 ஆக உள்ளது. அதேபோல், நாடு முழுவதும் கொரோனா தொற்றுடன் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை  2 லட்சத்து 76 ஆயிரத்து 685 ஆக உள்ளது.

Advertisement