வைரஸ் தொற்றால் அதிரும் அமெரிக்கா: ஒரேநாளில் 25,857 பேருக்கு கொரோனா

564

வாஷிங்டன்: கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வரும் அமெரிக்காவில் ஒரேநாளில் 25 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு தொற்று கண்டறியப்பட்டிருப்பது அந்நாட்டு மக்களை மேலும் கவலைக் கொள்ள செய்துள்ளது. கொத்துகொத்தான பாதிப்புகளால் அந்நாட்டு மக்கள் தொடர்ந்து பீதியடைந்து வருகின்றனர். சீனாவில் வூஹான் நகரில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் 5 மாதங்களுக்கு மேலாக உலக நாடுகளின் செயல்பாட்டை முடக்கியுள்ளது. இந்த தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல நாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

இந்நிலையில் அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிய உச்சமாக 25,857 பேருக்கு தொற்று உறுதியாகியிருப்பது அந்நாட்டு மக்களை மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் தெரிவித்ததாவது, இவ்வளவு அதிகமான கொரோனா பாதிப்புகளுக்கு அதிகமான பரிசோதனைகளே காரணம். அமெரிக்கர்கள் அனைவரும் விவாதமின்றி இதனை ஏற்றுக்கொள்ள வேண்டும். பரிசோதைகளை அதிகரிப்பது தொற்றை கண்டறிய பேருதவியாக இருக்கும் என தெரிவித்தார்.

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்துள்ளது. இந்த அளவிலான பாதிப்புகளுக்கு பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி வருவதே காரணம் என்று அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை நெருங்கி வருவது பலரையும் கவலை கொள்ள வைத்துள்ளது. உலகளவில் கொரோனவால் அதிகளவில் பாதிக்கப்பட்டவர்கள் பட்டியலில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of