அடுத்த 3 மாதங்கள் மிகவும் முக்கியமானவை | Harsh Vardhan

2372

பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதில் அடுத்த 3 மாதங்கள் மிகவும் முக்கியமானவை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் பெருந்தொற்றை சந்திப்பதற்கான தயார் நிலை குறித்து, அந்த மாநிலத்தின் மூத்த அதிகாரிகளுடன் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்சவர்தன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டில் பெருந்தொற்றால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 7 லட்சத்துக்கும் கீழாக குறைந்து விட்டதாகவும், கடந்த 3 மாதங்களில் பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், பெருந்தொற்றை கட்டுப்படுத்துவதில் அடுத்த 3 மாதங்கள் முக்கியமானவை என கூறிய ஹர்ஷவர்தன், வரும் பண்டிகை காலத்திலும், குளிர் காலத்திலும் பெருந்தொற்றை எதிர்கொள்வதற்கு போதுமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என கூறினார்.

Advertisement