சென்னை விமான நிலைய அதிகாரிக்கு கொரோனா உறுதி..! – 3 பிரிவுகளுக்கு சீல்..!

395

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய நிர்வாக அலுவலகத்தில் உள்ள மின்சார பராமரிப்புப் பிரிவு அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் சென்னையை அடுத்த மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.

அவருடன் பணியாற்றிய அதிகாரிகள் மற்றும் ஊரியர்கள், 14 நாட்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலைய நிர்வாக அலுவலக விமான நிலையத்துக்கு அருகே அமைந்துள்ளது. இந்த அலுவலகக் கட்டடத்தின் 2வது தளத்தில் கொரோனா பாதித்த அதிகாரி பணியாற்றி வந்ததால், அங்கு செயல்பட்டுக் கொண்டிருந்த 3 பிரிவுகளும் மூடப்பட்டு மூன்று நாள்களுக்கு சீல்வைக்கப்பட்டுள்ளது.

2வது தளம் முழுவதும் கிருமிநாசினி தெளித்து தூய்மைப்படுத்தும் பணியும் நடந்து வருகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of