மஹாராஷ்டிராவில் மேலும் 114 போலீசாருக்கு கொரோனா..!

326

மஹாராஷ்டிராவில் மேலும் 114 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மஹாராஷ்டிராவில் கொரோனா பரவத் துவங்கியது முதல் போலீசார் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ஏற்கனவே மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அடைந்துள்ள போலீசாரின் எண்ணக்கை 2 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்நிலையில் புதிதாக 114 போலீசாருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் மாநிலத்தில் கொரோனா பாதித்த போலீசாரின் மொத்த எண்ணிக்கை 2,325 ஆக உள்ளது.

இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா பாதித்த போலீசார் ஒருவர் இறந்ததால் கொரோனாவுக்கு பலியான போலீசாரின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 62,228 ஆக உள்ளது.

மொத்த பலி எண்ணிக்கை இதுவரை 2,098 ஆக உள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of