துடிதுடிக்க இறந்த நபர் – மனிதாபிமானத்தை கொன்ற கொரோனா

846

ஆந்திர மாநிலம் குண்டூர் அருகே கொரோனா தொற்று காரணமாக சாலையில் மயங்கி விழுந்து ஒருவர் பரிதாபமாக மரணம் அடைந்தார்.

குண்டூர் மாவட்டத்தில் உள்ள சத்தனப்பள்ளி வீதியை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்ல இருந்தார்.

அவரை அழைத்து செல்ல சரியான நேரத்தில் ஆம்புலன்ஸ் வராததால் ஆட்டோ ஒன்றில் ஏறி மருத்துவமனைக்கு செல்ல முயன்றார்.

அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை அறிந்த ஆட்டோ ஓட்டுநர் அவரை அனுமதிக்கவில்லை. இந்நிலையில் அவர் அதே இடத்தில் சாலையில் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் அறிந்து 2 மணி நேர தாமதத்திற்கு பின் அதிகாரிகள் அங்கு வந்தது, அவரின் சடலத்தை எடுத்து சென்று தகனம் செய்தனர்.