இந்தியாவில் பெரும் மாற்றம் – அதிர்ச்சி தகவல்

2265

வயதானவர்களை கொரோனா வைரஸ் அதிகமாக பாதிக்கும் என கூறி வரும் நிலையில், இந்தியாவில் பெரும் மாற்றம் காணப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சக இணை செயலாளர் லவ் அகர்வால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் வயது விபரங்களை வெளியிட்டார்.

கொரோனா வைரஸால் பாதித்தவர்களில், 20 வயதுக்கு உட்பட்டோர் 9 சதவீதம் பேர் என தெரிவித்த லவ் அகர்வால், 21 வயதில் இருந்து 40 வயதுக்கு உட்பட்டோரின் கொரோனா பாதிப்பு 42 சதவீதம் என குறிப்பிட்டார்.

41 வயதில் இருந்து 60 வயதுக்கு உட்பட்டோரின் கொரோனா பாதிப்பு 33 சதவீதம் எனவும் அவர் தெரிவித்தார். 60 வயதுக்கு மேற்பட்டோரின் கொரோனா பாதிப்பு 17 சதவீதம் என லவ் அகர்வால் தெரிவித்தார்.

இருப்பினும் கொரோனாவால் உயிரிழந்தவர்களில் 68 பேர் மூத்த குடிமக்கள் என குறிப்பிட்டார். அவர்களுக்குச் சர்க்கரை வியாதி, மூச்சுத் திணறல், இருதய கோளாறு உள்ளிட்ட நோய்கள் இருந்ததாக மத்திய சுகாதாரத் துறையின் இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of