கொரோனா நிவாரண உதவிகள்.. ஆயிரம் விளக்கு திமுக எம்.எல்.ஏ-வை மிஞ்சும் அதிமுக முன்னாள் கவுன்சிலர்

1042

கொரானோ அச்சத்தின் எதிரொலியாக மார்ச் மாதம் 22 ம் தேதி தொடங்கியது நாடு முழுவதும் பொது ஊரடங்கு…

தமிழகத்தில் ஏழை எளியோர்,தினக்கூலிகள்,ஆதரவற்றோர் என கோடிக்கணக்கான ஊரடங்கால் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

உள்ளாட்சித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து அம்மா உணவகங்களிலும் மக்களுக்கு இலவச உணவு வழங்கப்பட்டது.அதிமுக,திமுக, காங்கிரஸ்,பாஜக மற்றும் பல்வேறு அமைப்புக்கள் தன்னார்வலர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை செய்து வருகின்றனர்.

குறிப்பாக சென்னையைப் பொறுத்தவரை,,பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் திமுகவினர் என்பதால் அவர்கள் களப்பணியாற்றிய அளவு,அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நல உதவிகளை வழங்கவில்லை என்ற முணுமுணுப்புக்கள் நிலவுகிறது.அந்த விமர்சனத்தை சென்னையில்,, அதிமுகவின் முன்னாள் மாமன்ற உறுப்பினர் சின்னையன் (எ) ஆறுமுகம் மட்டுமே ஈடு செய்தார்.

மக்கள் பாதிப்படைந்து,வருமானமின்றி அவதிப்படும் நேரத்தில் அவர்களுக்கு உதவி செய்து ஸ்கோர் செய்வது ஒருவகையில் அரசியல் யுக்தியும் கூட.

அந்த வகையில்,ஆயிரம் விளக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வத்தை முற்றிலுமாக மக்கள் மறந்து போகுமளவு செய்திருக்கிறார் அதிமுகவின் முன்னாள் மாமன்ற உறுப்பினர் சின்னையன்..மார்ச் 22 ம் தேதி ஊரடங்கு தொடங்கிய நாள் முதல் தினந்தோறும் தொடர்ச்சியாக 55 நாட்களுக்கும் மேலாக, ஆயிரம் விளக்கு,தேனாம்பேட்டை பகுதியில் வசிக்கும் ஆயிரக்கணக்கான தினக்கூலிகள் மற்றும் விளிம்புநிலை மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கி அவர்களது தேவைகளை நிறைவேற்றிவருகிறார்..

ஒவ்வொரு நாட்களுக்கு ஒவ்வொரு விதமான பொருட்களை வழங்கி தேனாம்பேட்டை மற்றும் ஆயிரம் விளக்கு பகுதியில் வசிக்கும் ஏழை மக்களின் பசியாற்றி இருக்கிறார். இது தொடர்பாக அவரிடம் பேசினோம்.

அம்மா உணவகம் சென்று கூட மக்கள் உணவுக்காக நின்று விடக்கூடாது என்ற கவனத்தோடு செயல்படுகிறேன்.

சாப்பாட்டிற்காக கையேந்துவது ரொம்பவும் வலி தரும் விஷயம் சார்..அதிமுகவின் தென் சென்னை வடக்கு மாவட்டம் சார்பில் இந்த நல உதவிகளை மக்களுக்கு செய்து வரேன்.,,நாளை என்ன நடக்கப்போகிறதென யாருக்கும் தெரியாத சூழலில் எம்.ஜி.ஆரின் தொண்டன்,அதிமுக நிர்வாகியாக தன்னால் முடிந்த உதவிகளை தினந்தோறும் செய்து கட்சித்தலைமையின் கட்டளையை நிறைவேற்றுகிறேன். வேறு எந்த எதிர்பார்ப்புக்களை இல்லை என்று கூறி முடித்துக்கொண்டார்..கொரானா குறித்த அச்சம் நிலவிய போதும், மக்களுக்கு உதவி செய்ய வேண்டுமென களமிறங்கி பணியாற்றி,,ஆயிரம் விளக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வத்துக்கு சவால் விடுக்கும் வகையில் செயல்பட்டு,நிவாரணம் வழங்கும் செயல்பாட்டில் அவரை வீழ்த்தியிருக்கிறார் முன்னாள் கவுன்சிலர் சின்னையன்…

மக்களும் மனமார அவரை வாழ்த்திவருகின்றனர்..

வாழ்த்துக்கள் சார்…

Advertisement