கொரோனா சமூக பரவலாக உருவெடுத்துள்ளது – கர்நாடக அமைச்சர்

125

கர்நாடகாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு மொத்தம் 25,317 பேர் பாதிக்கப்பட்டுள்ளர். 14,389 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை அங்கு 401 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தொற்று அதிகரித்து வந்தாலும் முதல்வர் எடியூரப்பா, துணை முதல்வர் அஸ்வத் நாராயண், அமைச்சர் சுதாகர் உள்ளிட்டோர், கர்நாடகாவில் கொரோனா வைரஸ் சமூக பரவலாக உருவெடுக்கவில்லை என்று தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் துமாகூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் மதுசாமி செய்தியாளர்களிடம் பேசிய போது, கொரோனா வைரஸ் சமூக பரவலாக உருவெடுத்துள்ளதால் அரசு கவலை அடைந்துள்ளதாகவும், அதை கட்டுப்படுத்த முயற்சித்தாலும், மாவட்ட அதிகாரிகளுக்கு அது கடினமாக உள்ளதாக கூறினார். எங்கேயோ நிலைமை கைமீறி சென்றுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of