கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு – அமைச்சர் விஜயபாஸ்கர்

315

சென்னை: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனை கட்டணம் ரூ.3 ஆயிரமாக குறைக்கப்பட்டு உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: தமிழகத்தில் அரசு சார்பில் 43 கொரோனா பரிசோதனை கூடங்களும், தனியார் சார்பில் 29 பரிசோதனை கூடங்களும் இருக்கின்றன. அரசு பரிசோதனை கூடங்களில் கட்டணம் இல்லை.

ஆனால் தனியார் பரிசோதனை கூடங்களில் ஐசிஎம்ஆர் நிர்ணயித்த கட்டணமான ரூ.4 ஆயிரத்து 500 வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வந்ததையடுத்து, தனியார் மருத்துவமனை அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

பரிசோதனை செய்வதற்கான கட்டணத்தை குறைக்குமாறு கோரியதை அவர்கள் ஏற்றுக் கொண்டனர். எனவே தனியார் பரிசோதனை கூடங்களில் இனி ரூ.3 ஆயிரம் மட்டுமே கொரோனா பரிசோதனைக்காக வசூலிக்கப்படும்.

முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் உள்ளவர்களுக்கு ரூ.2 ஆயிரத்து 500 கழித்துக்கொள்ளப்படும். அந்த தொகை அரசால் வழங்கப்பட்டு விடும். விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றார்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of