இறந்த பெண்ணுக்கு கொரோனா – இறுதி சடங்கில் பங்கேற்றவர்கள் அச்சம்

161

ராஜபாளையத்தில் இறந்த பெண்ணுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால், அவரது இறுதி சடங்கில் பங்கேற்றவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தெற்கு வைத்திய நாதபுரம் பகுதியைச் சேர்ந்த பார்வதி. இவர் கடந்த 26ம் தேதி உடல் நிலை பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், மூச்சுதினறல் காரணமாக அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதனிடையே, கடந்த 30-ஆம் தேதி சிகிச்சை பலனின்றி பார்வதி உயிரிழத்துள்ளார். பரிசோதனை அறிக்கை வருவதற்கு முன்பு இறந்தவரின் உடலை உறவினர்கள் அடக்கம் செய்துள்ளனர்.

இந்நிலையில் பரிசோதனை முடிவில் இறந்தவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் இறுதி சடங்கில் பங்கேற்றவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of