அப்பளம் சாப்பிட்டால் கொரோனா வராது சொன்ன அமைச்சருக்கே கொரோனா

592

அப்பளம் சாப்பிட்டால் வைரஸ் தொற்று வராது என்று கூறிய மத்திய இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில் பாபிஜி அப்பளப் பாக்கெட்டுகள் இரண்டை கையில் பிடித்துக் கொண்டு பேசிய அவர், சுயசார்பு இந்தியா திட்டத்தின் கிழ் இந்த அப்பளம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் இந்த அப்பளம் வைரஸை எதிர்த்து போராடத் தேவையான ஆன்டிபாடிகளை உருவாக்க உதவும் என்று கூறினார்.

பாபிஜி அப்பளத்தை சாப்பிட்டால் வைரஸ் தொற்று வராது என்றும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில் இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், உடல்நிலல் சீராக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.