பெருந்தொற்று பாதிப்பு குறித்து Latest Updates

355

தமிழகத்தில் மேலும் ஆயிரத்து 232 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு  உறுதி செய்யப்பட்டுள்ளதால், மொத்த பாதிப்பு 7 லட்சத்து 94 ஆயிரமாக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் தினந்தோறும் பெருந்தொற்று பாதிப்புகள் குறித்த அறிவிப்புகள் சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழகத்தில் ஆயிரத்து 232 பேருக்கு பெருந்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பெருந்தொற்று பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 94 ஆயிரத்து 20 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 347 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் சென்னையில் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 18 ஆயிரத்து 549ஆக உயர்ந்துள்ளது. பெருந்தொற்று பாதிப்பில் இருந்து  7 லட்சத்து 71 ஆயிரத்து 693 பேர் குணமடைந்துள்ள நிலையில், 10 ஆயிரத்து 491 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமிழகத்தில் பெருந்தொற்றுக்கு ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 11 ஆயிரத்து 836 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை ஒரு கோடியே 26 லட்சத்து 75 ஆயிரம் பெருந்தொற்று மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

Advertisement