தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 20 ஆயிரத்தை தாண்டியது.!!! மே மாதம் பாதிப்பு விவரம்…

261

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 874 பேருக்கு இன்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்துள்ளது.

சென்னையில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 618 பேருக்கு தொற்று ஏற்பட்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் 20,246 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று மட்டும் 11,334 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு அடைந்தோரில் 518 பேர் ஆண்கள். 356 பேர் பெண்கள் ஆவர்.

மாநிலம் முழுவதும் பரிசோதனை மையங்கள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 43 அரசு மற்றும் 28 தனியார் என 71 ஆய்வகங்கள் செயல்பட்டு வருகின்றன.கடந்த 24 மணிநேரத்தில் 765 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரையில் மொத்தம் 11,313 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 154 ஆக அதிகரித்திருக்கிறது. டிஸ்சார்ஜ் ஆனவர்கள், உயிரிழப்புகளை தவிர்த்து 8,776 பேர் கொரோனா பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மே மாத கொரோனா பாதிப்பு நிலவரம்:

 • மே 01 – 2526
 • மே 02 – 2757
 • மே 03 – 3023
 • மே 04 – 3550
 • மே 05 – 4058
 • மே 06 – 4829
 • மே 07 – 5409
 • மே 08 – 6009
 • மே 09 – 6535
 • மே 10 – 7204
 • மே 11 – 8002
 • மே 12 – 8718
 • மே 13 – 9227
 • மே 14 – 9674
 • மே 15 – 10108
 • மே 16 – 10585
 • மே 17 – 11224
 • மே 18 – 11760
 • மே 19 – 12448
 • மே 20 – 13191
 • மே 21 – 13967
 • மே 22 – 14753
 • மே 23 -15,512
 • மே24 – 16,277
 • மே25 – 17,082
 • மே26 – 17,728
 • மே27 – 18,545
 • மே 28 – 19,372
 • மே 29 – 20,246
Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of