கொரோனா தடுப்பூசி – பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் இன்று பரிசோதனை

731

கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. உலகின் பல விஞ்ஞானிகள் குழு தனித்தும் சமூகமாகவும் அதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

கொரோனா தடுப்பூசி கண்டறியும் முயற்சிக்காக பில் கேட்ஸ் அறக்கட்டளையானது இதுவரை 100 மில்லியன் டாலர்கள் நன்கொடையாக அளித்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா மாகாணத்தில் பில்கேட்ஸ் அறக்கட்டளை சார்பில் உள்ள ஆராய்ச்சி மையத்தில் ஐஎன்ஓ – 4800 என்ற தடுப்பூசியை உருவாக்கி உள்ளனர். இந்த தடுப்பூசியை இன்று பரிசோதனை செய்ய உள்ளனர். இதற்காக 40 பேரை அவர்கள் தேர்வு செய்துள்ளனர்.

சோதனைக்கு முன்வந்தவர்களுக்கு 4 வார இடைவெளியில் தடுப்பூசி போட திட்டமிடடப்பட்டுள்ளது. இந்த பரிசோதனை வெற்றியடைந்தால், அடுத்ததாக உலக சுகாதார மையத்திற்கு அனுப்பி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்குள் 10 லட்சம் தடுப்பூசிகளை உருவாக்க திட்டமிட்டு உள்ளனர். கொரோனா வைரஸிற்காக அமெரிக்காவில் பரிசோதனை செய்யப்படும் 2-வது தடுப்பூசி இதுவாகும்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of