ஜப்பானில் தனிமைப்படுத்தப்பட்ட கப்பலில் 8 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ்..!

344

கொரோனா வைரஸ் பரவி வருவதால் ஜப்பானை சேர்ந்த டைமண்ட் சொகுசு கப்பல் பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் 2 வாரங்களுக்கும் மேலாக அந்த நாட்டின் யோகோஹாமா துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

இந்த கப்பலில் 132 ஊழியர்கள், 6 பயணிகள் என இந்தியர்கள் 138 பேரும் உள்ளனர். இதில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இருந்தனர்.

மேலும் ஒரு இந்திய ஊழியருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாக டோக்கியோவில் உள்ள இந்திய தூதரகம் கூறியுள்ளது. இதன் மூலம் ஜப்பான் கப்பலில் வைரசால் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of