7 ஆயிரத்தை நெருங்கிய பாதிப்பு..! இன்றைய கொரோனா நிலவரம்..!

401

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தை சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி, இன்று மட்டும் தமிழத்தில் 6 ஆயிரத்து 785 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 1 லட்சத்து 99 ஆயிரத்து 749 பேராக அதிகரித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரை, இன்று ஒரு நாளில் மட்டும் ஆயிரத்து 299 பேருக்கும், ஒட்டுமொத்தமாக 92 ஆயிரத்து 206 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் 88 பேர் உயிரிழந்து நிலையில், 6 ஆயிரத்து 504 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.