கொரோனா பரவல்..! தமிழகத்தின் தற்போதைய நிலை என்ன..? முக்கிய தகவல்..!

563

தமிழகத்தில் கட்டுக்கு அடங்காத அளவிற்கு கொரோனா பரவல் இருந்து வருகிறது. இதனை தடுப்பதற்கு, தமிழக அரசு தீPவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலின் நிலை குறித்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று ஒரு நாளில் மட்டும் 3,882 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், சென்னையில் மட்டும் 2,182 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் இன்று ஒரு நாளில் 2,852 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்று கூறிய சுகாதாரத்துறை, தற்போது தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 90,049 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளது.

தமிழ்நாட்டில் 7-வது நாளாக ஒரே நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியது என்பது குறிப்பிடத்தக்கது.