கொரோனா பாதிப்பு..! தமிழகத்தின் தற்போதைய நிலவரம் என்ன..?

446

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் விவரத்தை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று ஒரு நாளில் மட்டும் 4 ஆயிரத்து 150 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதன்மூலம், 1 லட்சத்து 11 ஆயிரத்து 151 பேருக்கு கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை, இன்று ஒரு நாளில் மட்டும் ஆயிரத்து 713 பேருக்கும், ஒட்டுமொத்தமாக 68 ஆயிரத்து 284 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், இன்று ஒரு நாளில் 60 பேர் பலியான நிலையில், 2 ஆயிரத்து 186 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 510 பேர் பலியாகி உள்ளனர். 62 ஆயிரத்து 778 பேர் வரை குணமடைந்துள்ளனர்.