கொரோன நிலவரம்..! இதுவரை இல்லாத அளவிற்கு இன்று டிஸ்சார்ஜ்..!

505

கொரோனா வைசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று ஒரு நாளில் மட்டும் 3 ஆயிரத்து 616 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்மூலம், தமிழகத்தில் மொத்தமாக 1 லட்சத்து 18 ஆயிரத்து 594 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை, இன்று ஒரு நாளில் ஆயிரத்து 203 பேருக்கும், மொத்தமாக 71 ஆயிரத்து 230 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று ஒரு நாளில் மட்டும் 65 பேர் உயிரிழந்த நிலையில், 4 ஆயிரத்து 545 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை டிஸ்சார்ஜ் ஆனவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பார்க்கும்போது, இதுவே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.