கொரோன வைரஸ் – சீனாவில் தொடர்ந்து அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

157

கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 54-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்து வருவதால், நாடு தற்போது மிகவும் இக்கட்டான சூழலில் இருப்பதாக சீன அதிபர் ஜி ஜின்பிங் எச்சரித்துள்ளார்.

சீனப் புத்தாண்டை முன்னிட்டு, அதிபர் ஜி ஜின்பிங் அந்நாட்டு உயர் அதிகாரிகளை சந்தித்துப் பேசினார். அப்போது, நாடு தற்போது மிகவும் இக்கட்டான சூழலில் இருப்பதாகவும், புதிய வகை கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்து வருவதாகவும் அதிகாரிகளை எச்சரித்தார்.

இந்நிலையில் புதிய வகை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலி எண்ணிக்கை 54-ஆக உயர்ந்துள்ளது. வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக, வைரஸ் பாதிப்பின் தோற்றப் பகுதியான வூஹான் நகரில் தனியார் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, வூஹான் உள்ளிட்ட 18 நகரங்களில் ரயில், விமானம், பேருந்து உள்ளிட்ட பொதுப் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது தனியார் வாகனங்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது. இந்தக் கட்டுப்பாடுகளால் சுமார் 5.6 கோடி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of