சென்னையில் இன்றைய பாதிப்பு எவ்வளவு தெரியுமா…? செங்கல்பட்டு, திருவள்ளூரிலும் தொற்று பரவல்..!

1093

சென்னை : தமிழகத்தில் இன்று மட்டும் 827 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இன்றும் சென்னையில் மட்டும் அதிக பாதிப்பு கண்டறியப்பட்டது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய பிறகு, தமிழகத்தில் சுமாராக இருந்து வந்த பாதிப்பு எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் புதிதாக 827 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19, ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும் சென்னையில் 559 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, செங்கல்பட்டில் 45 பேருக்கும், திருவள்ளூரில் 38 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 19,372 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம், தமிழகத்தில் அதிகபட்சமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக சென்னை நீடித்து வருகிறது. சென்னையில் 12,762 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, செங்கல்பட்டில் 933 பேரும், திருவள்ளூரில் 863 பேரும், கடலூரில் 443 பேரும், அரியலூரில் 362 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மாவட்ட வாரியான முழு விபரம் இதோ..!

Advertisement