கொரோனா நிலவலரம் – எண்ணிக்கையை வெளியிட்ட சுகாதாரத்துறை

384

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்து சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று ஒரு நாளில் மட்டும் தமிழகத்தில் 4 ஆயிரத்து 231 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்மூலம் தமிழகத்தில் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை, 1 லட்சத்து 26 ஆயிரத்து 581-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில், இன்று ஒரு நாளில் ஆயிரத்து 216 பேருக்கும், ஒட்டுமொத்தமாக 73 ஆயிரத்து 728 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், தமிழகம் முழுவதும் இன்று ஒரு நாளில் மட்டும் 65 பேர் பலியாகியுள்ள நிலையில், 3 ஆயிரத்து 994 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.