இன்றைய கொரோனா நிலவரம் – வெளியிட்ட சுகாதாரத்துறை

845

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரம் குறித்து சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று தமிழகத்தில் 3 ஆயிரத்து 756 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதன்மூலம், தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 22 ஆயிரத்து 350 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை, இன்று ஒரு நாளில் மட்டும் ஆயிரத்து 261 பேருக்கும், ஒட்டுமொத்தமாக 72 ஆயிரத்து 500 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இன்று ஒரு நாளில் மட்டும் 64 பேர் பலியான நிலையில், 3 ஆயிரத்து 051 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.