கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல தமிழ் காமெடி நடிகர்..!

707

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுமானவர் நடிகர் கருணாஸ். பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்த இவர், தீவிர அரசியலிலும் இறங்கினார். தற்போது எம்.எல்.ஏ-வாக இருக்கும் கருணாஸ், சமீபத்தில் திண்டுக்கல்லில் உள்ள தனது வீட்டில் இருந்து வந்துள்ளார்.

அந்த வீட்டின் பாதுகாவலராக இருந்த நபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, கருணாஸ்க்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், கொரோனா தொற்று உறுதியானதைத் தொடர்ந்து, வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் கருணாஸ்.

இந்த தகவல், அவரது குடும்பத்தினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நடிகர்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், தற்போது அந்த பட்டியலில் கருணாஸ் சேர்ந்துள்ளார்.

Advertisement