சென்னை மக்களே.. நல்ல செய்தி.. நீண்ட நாட்களுக்கு பிறகு மிக குறைவான பாதிப்பு

769

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் எவ்வாறு இருக்கிறது என்பது பற்றி, சுகாதாரத்துறை தினம்தோறும் அறிவித்து வருகிறது.

அதன்படி, இன்று ஒரு நாளில் மட்டும் தமிழகத்தில் 5 ஆயிரத்து 880 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 2 லட்சத்து 85 ஆயிரத்து 024 பேருக்கு ஒட்டுமொத்தமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை, இன்று ஒரு நாளில் 984 பேரும், ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 7 ஆயிரத்து 109 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று ஒரு நாளில் மட்டும் 119 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 6 ஆயிரத்து 488 பேர் இன்று ஒரு நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னையில் நீண்ட நாட்களுக்கு பிறகு பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்திற்கு கீழே சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.