கொரோனா அப்டேட்..! தமிழகத்தின் நிலை என்ன..?

583

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் எவ்வாறு இருக்கிறது என்பது பற்றி, சுகாதாரத்துறை தினம்தோறும் அறிவித்து வருகிறது.

அதன்படி, இன்று ஒரு நாளில் மட்டும் தமிழகத்தில் 5 ஆயிரத்து 883 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் 2 லட்சத்து 90 ஆயிரத்து 907 பேருக்கு ஒட்டுமொத்தமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை, இன்று ஒரு நாளில் 986 பேரும், ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 8 ஆயிரத்து 124 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று ஒரு நாளில் மட்டும் 118 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 5 ஆயிரத்து 043 பேர் இன்று ஒரு நாளில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Advertisement