கொரோனா அச்சம் – இளைஞர்களை மரத்தில் தங்கவைத்த கிராமத்தினர்

487

சென்னையில் உள்ள எலக்டிரிக்கல் கடையில் வேலை பார்த்துவந்த மேற்கு வங்க இளைஞர்கள், கொரோனா அச்சம் காரணமாக தங்களது சொந்த கிரமாங்களுக்கு சென்றனர்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர்கள் 7 பேரையும் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் அறிவுறுத்தியுள்ளனர்.

ஆனால், அவர்களை தனிமைப்படுத்தி வைக்க கிராமத்தில் சரியான இடம் இல்லாததால், மரங்களில் தங்குவதற்கு ஏதுவாக கிராமத்தினர் சில வசதிகளை செய்துக்கொடுத்துள்ளனர்.

அதவாது, மரத்தில் உறங்குவதற்கு கட்டில்கள் உட்பட குறிப்பிட்ட சில வசதிகளை கிராமத்தினர் செய்துக்கொடுத்துள்ளனர்.

மேலும், இயற்கை உபாதைகளுக்கு மட்டும் மரத்தின் கீழே இறங்கும் அந்த இளைஞர்களுக்கு, தங்களது துணிகளை துவைப்பதற்கு தனியாக இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of