இந்தியாவில் கொரோனா சமூகபரவலாக மாறவில்லை – ஹர்ஷவர்தன்

368

டெல்லியில் அமைச்சர்கள் குழு கூட்டத்திற்குப்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், இந்தியாவில் சிலநகரங்களில் மட்டுமே உள்ளூர் அளவில் கொரோனா வைரஸின்  பாதிப்பு அதிகமாக இருக்கிறது என்று கூறினார்.

மக்கள் தொகை அதிகமாக இருப்பதால்தான் பாதிப்பு அதிகமாக இருப்பது போல தெரிகிறது என்றும் அவர் தெரிவித்தார். உலகஅளவில் ஒப்பிடும்போது பத்துலட்சம் மக்கள்தொகையை கணக்கிட்டால் இந்தியாவில் குறைவாகவே இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு சமூகப்பரவலாக மாறவில்லை என்றும் அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறினார். சென்னை உள்ளிட்ட 32 மாவட்டங்களில்தான் 80 சதவிகித மரணங்கள் நிகழ்கின்றன என்பதையும் அவர் குறிப்பிட்டார்.

ஒருவாரகாலமாக தொடர்ந்து நாள்தோறும் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருவது இந்திய மக்கள் தொகையை ஒப்பிடும் போது குறைவான அளவுதான் என உலகசுகாதார அமைப்பு தெரிவித்திருப்பதாக கூறினார்.

24 மணிநேரத்தில் 50 ஆயிரத்திற்கும் அதிகமாக கொரோனா வைரஸ் பரவல் தொற்று இருந்தால்தான் சமூகப்பரவலாக மாறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்தார்.

Advertisement