சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் 3 பேருக்கு கொரோனா?

240

சென்னை: கொரோனா ஊரடங்கினால் கடந்த மார்ச் 24-ந்தேதி முதல் சென்னை ஐகோர்ட்டில் அவசர வழக்குகள் மட்டும் காணொலிக்காட்சி மூலம் விசாரிக்கப்பட்டன. ஊரடங்கு நிபந்தனைகள் ஓரளவு தளர்த்தப்பட்டதையடுத்து கடந்த 1-ந்தேதி முதல் சென்னை ஐகோர்ட்டில் அனைத்து வழக்குகளும் காணொலிக்காட்சி மூலம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.

இந்தநிலையில் சென்னை ஐகோர்ட்டில் 3 நீதிபதிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதாகவும், இதனால் அவர்கள் தங்களது வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாகவும் தகவல் வெளியாகின. சென்னை ஐகோர்ட்டு பதிவுத்துறையில் பணியாற்றும் துணைப்பதிவாளர் உள்பட 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதையடுத்து ஐகோர்ட்டில் மீண்டும் 6 அமர்வுகள் மட்டுமே வழக்குகளை விசாரிக்கும் என்று ஐகோர்ட்டு நிர்வாகம் அறிவித்து உள்ளது. அதன்படி நீதிபதிகள் வினித் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் ஆகியோர் தலைமையில் ஒரு டிவிசன் பெஞ்ச், நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், புஷ்பா சத்யநாராயணா ஆகியோர் தலைமையில் மற்றொரு டிவிசன் பெஞ்ச் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த 2 அமர்வுகளும் டிவிசன் பெஞ்ச் விசாரிக்கும் அழைத்து வழக்குகளையும் விசாரிக்கும். அதே போன்று நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எம்.சுந்தர், எம்.நிர்மல்குமார், என்.ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் தலைமையில் தனித்தனியாக அமர்வுகள் அமைக்கப்பட்டு உள்ளன.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of