இந்தியர்களை மீட்க இன்று சீனா செல்கிறது விமானப்படை விமானம்

112

சீனாவில் ஹுபேய் மாகாணம் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

சீனாவில் கொரோனா வைரஸ் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து, நகரில் இருந்த வெளிநாட்டவர்களை அந்தந்த நாடுகள் விமானம் மூலம் மீட்டுச் சென்றன. அதன்படி இந்தியா 2 முறை சிறப்பு விமானங்கள் மூலம், வூஹான் நகரில் இருந்து 600-க்கும் மேற்பட்ட இந்தியர்களை மீட்டது.

இந்நிலையில் வூஹான் நகரில் சிக்கியுள்ள எஞ்சிய இந்தியர்களை மீட்பதற்காக விமானப்படை விமானம் இன்று சீனா செல்கிறது. மருந்து பொருட்களுடன் செல்லும் இந்த விமானம் மூலம், அங்குள்ள இந்தியர்கள் அழைத்து வரப்பட உள்ளனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of