400 இந்தியர்களை மீட்க சீனாவுக்கு கிளம்பிய ஏர் இந்தியா விமானம்

258

கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 400 இந்தியர்களை அழைத்து
வர ஏர்-இந்தியாவுக்கு சொந்தமான விமானங்கள் சீனாவின் உகான் நகருக்கு புறப்பட்டு சென்றன.

இந்த விமானங்கள் நாளை மதியம் 2 மணிக்கு டெல்லி வரும் என ஏர்-இந்தியா தலைமை நிர்வாக இயக்குநர் அஸ்வானி லோகானி தெரிவித்தார்.

டெல்லி அழைத்து வரப்படும் இந்தியர்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் வெளியுறவு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் மேற்கொண்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.