கொரோனாவுக்கு 14 மாத குழந்தை பலி

355

ஜாம்நகர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதியின் 14 மாத ஆண் குழந்தைக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து குழந்தை அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

மேலும், குழந்தையின் பல்வேறு உடல் உறுப்புகள் தொடர்ந்து செயலிழந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில், 2 நாட்களாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவந்த 14 மாத பச்சிளம் குழந்தை நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

இதனிடையே தெலங்கானாவில் பிறந்து 23 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of