மே 15ம் தேதி வரை தடை தொடர வேண்டும் என பரிந்துரை

738

தேசிய ஊரடங்கு நீட்டிக்கப்படாவிட்டாலும், கல்வி நிறுவனங்களுக்கும், மத ரீதியிலான நிகழ்ச்சிகளுக்கும் மே 15ம் தேதி வரை, தடை தொடர வேண்டும் என மத்திய அரசுக்கு அமைச்சர்கள் குழு பரிந்துரைத்துள்ளது.

தேசிய ஊரடங்கு விவகாரம் தொடர்பாக, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் மத்திய அமைச்சர்கள் குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, நிர்மலா சீதாராமன், பியூஷ் கோயல், பிரகாஷ் ஜாவடேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில், ஊரடங்குக்கு பிறகான சூழலை கையாள்வதற்கான வழிமுறைகள் குறித்தும், மருத்துவ உபகரணங்கள் கொள்முதல், மருத்துவமனைகளின் தயார் நிலை குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of