கொரோனா பாதித்த நபர் மாயம் – கண்டுபிடிக்க 3 தனிப்படை

706

டெல்லியை சேர்ந்த நித்தீன் சர்மா என்பவர் கொரோனா அறிகுறியுடன் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனைக்கு பிறகு அவருக்கு கொரோனா தொற்று இல்லை என வீட்டிற்கு அனுப்பப்பட்ட நிலையில், நித்தீன் சர்மாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மருத்துவமனை அதிகாரிகள், அவரை தொடர்பு கொள்ள முயன்ற போது நித்தீன் சர்மா மாயமானது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனை அதிகாரிகள் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைதொடர்ந்து நித்தீன் சர்மாவவை கண்டுபிடிக்க மாவட்ட காவல்துறை சார்பில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகள் உஷார் படுத்தப்பட்டு, அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement