இந்தியா : கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29ஆக அதிகரிப்பு

387

சீனாவிலிருந்து தாயகம் திரும்பிய கேரளாவை சேர்ந்த 3 பேருக்கு, கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பினர்.

இதையடுத்து நேற்று முன்தினம் தெலங்கானா, ராஜஸ்தான், டெல்லி ஆகிய பகுதிகளை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆக்ராவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரியவந்தது. மேலும் ராஜஸ்தானுக்கு சுற்றுலா வந்த இத்தாலி நாட்டை சேர்ந்த 16 பேர் மற்றும் அவர்களுடன் இருந்த கார் ஓட்டுநருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் குருகிராமைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவருக்கும் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், இந்தியாவில் கொரேனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 29ஆக அதிகரித்துள்ளது.

இதன் எதிரொலியாக வைரஸ் மேலும் பரவாமல் இருக்க தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

போதுமான மருந்து, மாத்திரைகளை கையிருப்பு வைத்திருக்கவும், கொரோனா அறிகுறியுடன் வருபவர்களை தனிமைப்படுத்துவதற்கான வார்டுகளை தயார் நிலையில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவிவிடும் என்ற அச்சத்தால், முகமூடிகள் மற்றும் கையுறைகள் வாங்குவதற்காக மருந்து கடைகளில் மக்கள் குவிந்து வருகின்றனர்.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of