கொரோனா அப்டேட் – உலக அளவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 34 லட்சத்தைக் கடந்தது

246

ஜெனீவா: சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

தற்போதைய நிலவரப்படி கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 69.66 லட்சத்தைக் கடந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கி பலியானோர் எண்ணிக்கை 4 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 34 லட்சத்தைத் தாண்டியுள்ளது. மேலும், கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்களில் 53 ஆயிரத்து 575-க்கும் மேற்பட்டோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of