வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பிணங்கள்

518

 மதுரை கீரைத்துறை மின் மயானத்தில் வரிசையாக பிணங்கள் அடுக்கி வைத்திருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மதுரையில் பெருந்தொற்று மரணங்கள், பெருந்தொற்று அல்லாத மரணங்கள் என  நாளொன்றுக்கு சராசரியாக 60 மரணங்கள் பதிவாகி வருகின்றன. மதுரை மாநகராட்சியை பொறுத்த வரைக்கும் தத்தனேரி, கீரைத்துறை ஆகிய இரண்டு இடங்களில் மின் மயானங்கள் இயங்கி வருகின்றன.

கீரைத்துறை மயானத்தை  ரோட்டரி கிளப் சார்பில் இயங்கி வருவதால், இரவில் எரியூட்டும் பணிகள் நடைபெறுவதில்லை என்பதாலும், பிணங்கள் பதப்படுத்தி வைக்கும் குளிர்சாதன பெட்டிகள் இல்லாததாலும் பிணங்கள் தேங்கியுள்ளன. தற்போது அந்த வீடியோ தான் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கீரைத்துறை மயானத்தில் ஒரேநாளில் மட்டும் 45 பிணங்கள் எரியூட்டப்பட்டன.

தற்போது கீரைத்துறை மயானத்தில் 24 மணி நேரமும் எரியூட்டும் பணிகள் நடைபெற துவங்கியுள்ளதாகவும், குளிர்சாதன பெட்டி வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்த மாநகராட்சி அதிகாரிகள், மக்கள் அந்த வீடியோவால் தேவையற்ற அச்சம் அடைய தேவையில்லை என்றும் கூறியுள்ளனர்.

Advertisement