நிலவில் பருத்தி சீன விஞ்ஞானிகள் சாதனை!

1144

நிலவின் மறுபக்கத்தை ஆராய சாங்-இ என்ற விண்கலத்தை ஜனவரி 3ம் தேதி சீனா அனுப்பியது. இதனுடன் சோதனை முயற்சியாக பருத்தி, உருளைகிழங்கு மற்றும் சில பழங்களின் விதைகளும் அனுப்பிவைக்கப்பட்டன.

மூன்று கிலோ விதைகளை நிலவில் சாங்-இ விண்கலம் தூவிய நிலையில், பருத்தி விதைகள் முளைவிட்டு வளர்ந்து வருவது தற்போது தெரியவந்துள்ளது. சாங்-இ விண்கலம் அதை படம்பிடித்து அனுப்பியுள்ளது.

இதன் மூலம் நிலவில் தாவரங்கள் வளர்வதற்கான சூழல் இருப்பது நிரூபணமாகியிருப்பதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.  நிலவில் மனிதர்கள் குடியேறுவதற்கான திட்டத்திற்கான வாய்ப்புகள் இதன் மூலம் அதிகரித்துள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

குறைந்த புவிஈர்ப்பு விசை, அதிக கதிர்வீச்சு, வெப்பம் மற்றும் குளிர் நிலவி வரும் நிலவில், தாவரங்கள் மற்றும் விலங்குகள் வாழ்வதற்கான சூழல் மிகவும் கடினம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இத்தகைய சூழ்நிலையில், சீனாவின் இந்த சாதனை முயற்சி பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.

Advertisement

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of