ட்ரெண்டாகும் Couple Challange.. கடுப்பாகும் முரட்டு சிங்கில்ஸ்..

1285

பேஸ்புக்கில் திடீரென எதாவது ட்ரெண்ட் ஆகும். அந்த ட்ரெண்டை அனைவரும் Follow செய்வார்கள். அண்மைகாலமாக Challenge என்ற ஹேஷ்டேக்குகள் அடிக்கடி உலா வருகிறது.

Black and White Photo Challange, No Makeup Challange, Blue Dress Challenge என ஹேஷ்டேக்குகள் டிரெண்டிங் ஆகி வருகின்றன. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக Couple Challange என்ற ஹேஷ்டேக்குகள் பேஸ்புக்கில் ட்ரெண்டாகி வருகிறது.

இந்த Challange என்னவென்றால் கணவன்-மனைவி, காதலன்-காதலி என ஜோடியாக எடுத்த புகைப்படத்தை பதிவிடுவதுதான். Couple Challange ஹேஷ்டேக்கில் பலர் தங்கள் ஜோடி போட்டோக்களை பதிவேற்றுகின்றனர்.

சிலர் முன்னாள் காதலன்/ காதலிகளை கடுப்பேத்துவதற்கு Couple Challenge-யை வாய்ப்பாக பயன்படுத்தி கொள்கிறார்கள். இவைகள் அனைத்தும் பொழுதுபோக்காகவும், நகைச்சுவையாகவும், தங்களின் இணையரின் மீது வெளிப்படுத்தும் காதலாகவே பார்க்கப்படுகிறது.

இந்த ஹேஷ் -டேக்களால் எந்த விதமான சண்டைகளும், ஆபாச வசைகளும் இல்லாமல் ஆரோக்கியமாக பதிவுகளாக பதிவிட்டு வருகின்றனர். இது ஒருபக்கம் இருக்க இதைபார்த்து முரட்டு சிங்கில்ஸ் கடுப்பாகியுள்ளனர். CoupleChallenge-க்கு போட்டியாக StopChallenge என்ற ஹேஷ் -டேக்குகளும் ட்ரெண்ட் செய்யப்படுகிறது.