சிங்கத்தை வேட்டையாடி புகைப்படம் எடுத்த தம்பதி!

681

ஆப்பிரிக்க கண்டத்தின் தென் பகுதியில் சுமார் 9,00,000 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்த பாலைவனம் கலஹாரி.

இங்கு சிங்கம், புலி, யானை என அனைத்து வகை காட்டு மிருகங்களும் வாழ்ந்து வருகின்றன. காட்டு விலங்குகளைப் பார்ப்பதற்கு ஆண்டு தோறும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.

காட்டுப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்லும் சஃபாரி போன்றவற்றுக்கும் சுற்றுலா நிறுவனங்கள் ஏற்பாடு செய்கின்றன. அப்படி கலஹாரி பாலைவனத்துக்கு சுற்றுலா சென்ற கனடாவைச் சேர்ந்த இளம்ஜோடியான டேரன், கார்லோன் கார்ட்டர் வேட்டையாடும் போட்டி ஒன்றில் பங்கேற்றனர்.

அங்கு சிங்கம் ஒன்றை துப்பாக்கியால் சுட்டு வேட்டையாடியுள்ளனர். பின்னர் வேட்டையாடப்பட்ட சிங்கத்தின் உடலுக்கு பின்னே அமர்ந்துக் கொண்டு இருவரும் முத்தமிட்டுக் கொண்டனர். அதனுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.

அந்தப் புகைப்படங்களை சுற்றுலா நிறுவனமான லெகிலிலா தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தனர். அந்தப் புகைப்படம் பதிவேற்றம் செய்யப்பட்டதற்கு உலகம் முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

பல சமூகவலைதளங்களிலிருந்து எதிர்ப்பு வலுவடைந்ததைத் தொடர்ந்து அந்த சுற்றுலா நிறுவனம் தனது சமூகவலைதளப் பக்கத்தை முடக்கியுள்ளது.

 

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of