குழந்தையை கடத்த முயன்ற தம்பதியை, மருத்துவமனை ஊழியர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

537

காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் குழந்தையை கடத்த முயன்ற தம்பதியை, மருத்துவமனை ஊழியர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு நாள்தோறும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். இந்த அரசு மருத்துமனையில் நிர்வாக சீர்கேடு காரணமாக பல முறைகேடுகள் நடந்து வந்துள்ளதை சத்தியம் தொலைக்காட்சி அவ்வப்போது வெளிப்படுத்தியுள்ளது.

தற்போதும் மருத்துவமனையில் உள்ள 12 கண்காணிப்பு கேமராக்களும் செயல்படாமல், வெறும் காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளன. இந்நிலையில் பிரசவ வார்டில் பச்சிளம் குழந்தையை கடத்த முயன்ற தம்பதியரை மருத்துவமனை ஊழியர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

குழந்தையை கடத்த இரண்டூ மூன்று நாட்களாக மருத்துவமனையில் தங்கி இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வரும் போலீசார், இதற்கு முன்னர் நடைபெற்ற குழந்தை கடத்தல் சம்பவங்களில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகின்றனர்.

Advertisement