என்னை கேட்காமல் எப்படி என்னை பெத்துக்கலாம்? பெற்றோர் மீது வழக்கு தொடர இளைஞர் முடிவு?

240

பெற்றோர்கள் மீது பல விதங்களில் மகன்கள் வழக்கு தொடர்ந்திருப்பார்கள் அதையும் நீதிமன்றம் விசாரித்து அதற்கு தீர்ப்பும் அளித்துள்ளது. ஆனால் யாரும் இதுவரை கொடுக்காத அளவிற்கு வித்தியாசமான ஒரு வழக்கை ரபேல் சாமுவேல் தொடர உள்ளார்.

இந்த ரபேல் சாமுவேல் ஆண்ட்டி நாட்டலிசம் என்ற புதியவகை சிந்தனை மீது ஈர்ப்பு உள்ளவர். ஆண்ட்டி நாட்டலிசம் என்பது பெற்றோர்கள் குழந்தைகளை பெற்றுக்கொள்வதற்கு ஒருவகை எதிரான சிந்தனை போக்கை கொண்டவர்கள்.

இதன் கொள்ளை என்னவென்றால் பெற்றோர்கள் தங்களின் தேவைக்காகவும், தங்களின் மகிழ்ச்சிக்காகவும் மட்டுமே குழந்தைகளை பெற்று கொள்கின்றனர். ஆகவே இது முற்றிலும் தவறான என்பதை எடுத்து சொல்வதாகும்.

அதன்படி அவர்களின் சந்தோஷத்துக்காக தான் என்னை பெற்றது மட்டுமில்லாமல், அவர்களின் விருப்பத்தை என் மீது தெளிக்கின்றார்கள்.

இதனால் தான் நான் என்னுடைய பெற்றோர்கள் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரபோவதாக உள்ளேன் என தெரிவித்தார்.