பணப்பட்டுவாடா செய்த திமுக பிரமுகர் கைது

397

கோவையில் பணப்பட்டுவாடா செய்ததாக திமுக பிரமுகர் வரதராஜனை போலீஸார் கைது செய்தனர்.

தமிழகத்தில் 17 -வது மக்களவைத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் வரும் வியாழக்கிழமை (ஏப்.18) நடைபெறுகிறது.

தேர்தல் வீதிமீறல்களை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் கோவை, குனியமுத்தூர் பகுதியில் திமுகவை சேர்ந்த வரதராஜன் என்பவர் பணப்பட்டுவாடா செய்வதாக, அதிமுகவை சேர்ந்த அபுபக்கர் என்பவர் புகார் அளித்தார்.

இதையடுத்து, புகாரின் பேரில் வரதராஜனை கைது செய்த போலீஸார் அவரிடமிருந்து ரூ.19 ஆயிரத்தை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of