ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய 3 பேர் கைது

311

கோவையில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய மூன்று பேரை கோவை மாநகர காவல்துறையினர் இன்று கைது செய்தனர். மேலும் சிமி அமைப்புடன் தொடர்புடைய ஒருவரையும் இன்று கைதுசெய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கை குண்டுவெடிப்பில் ஈடுபட்ட தீவிரவாதிகளுடன் தொடர்புடைய நபர்கள் கோவையில் பதுங்கியிருப்பதாக வெளியான ரகசிய தகவலையடுத்து, உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர் உள்ளி்ட்ட 7 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இரண்டு நாட்களாக சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில், ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையதாக அஷாருதீன், அக்ரம் ஜிந்தா ஆகிய இருவரை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டதுடன், கோவை குண்டுவெடிப்பில் இறந்த முக்கிய குற்றவாளியான ஜஹ்ரான் ஹாஸ்மி என்ற நபருடன் சமூகவலைத்தளம் மூலம் தொடர்புவைத்திருந்ததாக மூன்று பேர் இன்று கைதுசெய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட உசேன், ஷாஜகான், சபிபுல்லா ஆகியோரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர் அவர்களிடம் காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில் சிமி அமைப்புடன் தொடர்புடைய ஒருவரையும் காவல்துறையினர் இன்று கைது செய்தனர்.

இதன்மூலம், கோவையில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய நபர்கள் தீவிரவாத செயலுக்கான ஏற்பாடுகளை செய்துவந்தது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of