மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், 2 மகள்களை கழுத்தை நெரித்து கொன்ற கொடூர தந்தை

366

கோவையில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், 2 மகள்களை கழுத்தை நெரித்து கொன்ற கொடூரத் தந்தையை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை மசக்காளிபாளையம் பகுதியை சேர்ந்த பத்மநாபன்- செல்வராணி என்ற தம்பதியினருக்கு ஹேமா வர்ஷினி, ஜீவா என்ற இரண்டு பெண் குழந்தைகள் இருந்தனர்.

இந்நிலையில். பத்மநாபனுக்கும், செல்வராணிக்கும் இடையே கடந்த இரண்டு ஆண்டுகளாக குடும்ப பிரச்சனை இருந்து வந்தததாக கூறப்படுகிறது.
நேற்று இரவும் வழக்கம்போல் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து செல்வராணி கோபித்து கொண்டு 2 மகள்களையும் வீட்டில் விட்டுவிட்டு வெள்ளலூர் பகுதியில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டதாக தெரிகிறது.

பின்னர் காலை வீட்டிற்கு வந்த செல்வராணி, இரண்டு மகள்களும் படுக்கையில் இறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

வீட்டில் கணவன் பத்மநாபனும் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

செல்வராணி சிங்காநல்லூர் போலீஸுக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், தலைமறைவாகி உள்ள பத்மநாபனை தேடி வருகின்றனர். மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் பெற்ற மகள்களை தந்தையே கொலை செய்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

avatar
  Subscribe  
Notify of