கேரள சூப்பர் ஸ்டாருக்கு பெருந்தொற்று..! ரசிகர்கள் அதிர்ச்சி..!

3565

தமிழில் உருவான மொழி, சத்தம் போடாதே, காவியத்தலைவன், நினைத்தாலே இனிக்கும் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரித்விராஜ்.

மலையாள சினிமாவில் சூப்பர் ஸ்டாராக இருக்கும் இவர், கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான லூசிபர் படத்தின் மூலம் இயக்குநராகவும் அவதரித்தார்.

தற்போது ஜன கன மன என்ற படத்தில் பிரித்விராஜ் நடித்து வரும் நிலையில், படக்குழுவிற்கு பெருந்தொற்று சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில், இயக்குநர் மற்றும் பிரித்விராஜிற்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். படக்குழுவில் உள்ள மற்ற கலைஞர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement